Wednesday, July 2, 2025

கண்ணன் பாமாலை - கண்ணை திறந்து பார் – Kannai Thiranthu Paar

 

கண்ணை திறந்து பார் – Kannai Thiranthu Paar

-------------------

கண்ணை திறந்து பார் மனமே-எந்த

காலமும் தவம் செய்தாலும் காணலரிதாகிய

மாதவன் வெகுநேரமாக காத்திருக்கின்றான்

உந்தன் முன்னே - ஞான                             (கண்ணை)

 

பண்ணும் இயலும் சேர்ந்தொலிக்க இரு

பார்வை என்னும் நீலமணி ஜொலிக்க

பண்ணும் தவமெல்லாம் பலிக்க-உந்தன்

பார்வை முன்னே வந்து நின்று சேவை தந்து களிக்க (கண்ணை)

 

நீலநிற தோகையொன்று நேரேனின்று ஆடி ஆடி

நர்த்தமிடும் அழகினை காணாய்

காண காண சொல்லி நீயும் காணாது போனால்

காலமெல்லாம் போகுது வீணாய்         (கண்ணை)

 

கனிந்த விதவிதமான மொழி பலவும்

கன்னத்திடை குழிந்த குழியும் நலமறிந்த

நன்னகையும் பிறவும் நான் சொல்லத்தகுமோ

இனி காணப்போவது நீயென நானென

ஏலம் விடுதலும் தகுமோ இகபர ஸுகமோ

இதனிலும் அது அதிகமோ இணை பெறுமோ

கொஞ்சமேனும் (கண்ணை)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...