Friday, June 27, 2025

சக்தி பாமாலை - சமயபுரத்தாளே மாரியம்மா – Samayapurathaale Maariyamma

சமயபுரத்தாளே மாரியம்மா – Samayapurathaale Maariyamma

-------------------------

சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா

சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

 

மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசி

மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் (சமயபுரத்தாளே)

 

துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா

தூயவனே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே)

 

பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்கு

பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் (சமயபுரத்தாளே)

 

எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மா

ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே)

 

கத்தி கதறுகிறோம் கேட்கலையோ – தாயே

கல்லேதான் உன் மனமும் கரையலையோ (சமயபுரத்தாளே)

 

உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே – எங்கள்

உமையவளே தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே)

 

காலிற் சலங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா

பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா (சமயபுரத்தாளே)

 

பூவாடை வீசுதம்மா பூமகளே

உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா (சமயபுரத்தாளே)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...