Saturday, June 21, 2025

குரு வந்தனம் - இன்ப கனவொன்று கண்டேன் – Inba Kanavondru Kanden

 

இன்ப கனவொன்று கண்டேன் – Inba Kanavondru Kanden

---------------

ஸ்லோகம்


ஓதும் பல சாஸ்திரத்தின் உண்மை ஆய்ந்து

இந்த உலக சுகம் துச்சமென உதறித் தள்ளி

ஆதி பரம் பொருளிடத்தில் இச்சை வைத்து

அஷ்டாங்க யோக முறை எட்டும் கற்று

நீதிநெறி வழுவாத நெறியில் நின்று

நிலையான சாயுஜ்யம் அடையும் மார்க்கம்

போதனை செய்கின்ற மஹான் ஞானானந்தன்

பொன்னடிகள் எஞ்ஞானன்றும் சிந்தையில் வைப்போம…

---------

இன்ப கனவொன்று கண்டேன் தோழி

எப்படி சொல்வேனடி - தோழி


அன்பர் அழகர் ஆராவமுதர் ஞானநந்தர்

அடியேன் சிரம் மீது தன் அடிவைத்து

அருள் செய்வதைப்போல்           (இன்ப)

 

கைகாட்டி எனை அழைத்தார் அழைத்து எந்தன்

காதினில் கனிவோடு கரைசேர வழி சொன்னார்

அழிவில்லா ஆனந்தம் அப்பொழுதே பெற்றேன்

ஹரிதாஸன் அறிவாகி அதுவாகி நின்றதைப்போல்  (இன்ப)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...