Saturday, June 21, 2025

குரு வந்தனம் - நானே உனை நம்பினேன் – Naane Unnai Nambinen

நானே உனை நம்பினேன் – Naane Unnai Nambinen

 -----------------------

ஸ்லோகம்

-------------------------

உத்தரை பகைவரென்றும்

மூர்க்கரை உறவரென்றும்

பித்தராய் அநேக ஜன்மம்

உலகில் பிறந்து இறந்து

உழலுவோற்கு பக்தியால்

யோகம் காட்டி யோகத்தால்

ஞானம் காட்டி ஸத்திய

ஞானானந்த வள்ளலே நின்

பதம் போற்றி போற்றி...

-----------------------

நானே உனை நம்பினேன் குருதேவா

நலம்தானே அருள்புரி தேவா தேவா தேவா

ஞான தபோவனத்தில் மோன தவம் புரியும்

ஞானப்பழமான ஞானானந்த தேவா (நானே)

 

சாந்த கல்யாண குணசீலா - எங்கள்

சங்கடங்கள் யாவும் தீர்த்தருள் மூலா

பந்தபாசம் நீக்கி பரம புனிதனாக்கும்

நந்தா ஆனந்தா ஞானானந்த தேவா (நானே)

 

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...