Saturday, June 28, 2025

கணபதி பாமாலை - ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

 

ப்ரபோ கணபதே – Prabho Ganapathey
-----------------

ராகம் : திலங்

---------------------

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

 

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்

சன்னதி சரண் அடைந்தோமே

 

சாந்தசித்த சௌபாக்யங்கள் யாவையும்

தந்தருள் சத்குரு நீயே ||

 

தேடி தேடி எங்கோ ஓடுகின்றோம் 

உன்னைதேடி கண்டுகொள்ளலாமே 

கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய 

குன்றென விளங்கும் பெம்மானே ||

 

ஆதிமூல கணநாத கஜானன அற்புத தவல ஸ்வரூப

தேவ தேவ ஜெய விஜய விநாயக சின்மயா பர சிவா தீபா ||

 

பார்வதி பால அபார வார வர பரம பகவ பவ சரணா 

பக்த ஜனசுமுக பிரணவ விநாயக பாமால பரிமள சரணா||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...