Tuesday, June 10, 2025

சக்தி பாமாலை - சின்னஞ்சிறு பெண்போலே - Chinnanchiru Penpole

 

சின்னஞ்சிறு பெண்போலே - Chinnanchiru Penpole

 ------------------

ராகம் : சிந்துபைரவி

இயற்றியவர்உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சண்முகம்

 ---------------------

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி

சீவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது

பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது ||


மின்னலைப்போல் மேனி அன்னை சிவாகாமி

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமேல்லாம் நிறைவாள்

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...