Wednesday, June 11, 2025

பன்னிரு திருமுறைகள்

 

பன்னிரு திருமுறை - பெரியபுராணம்

புனித மெய்க் கோல நீடு

புகலியார் வேந்தர் தம்மைக்

குனி சிலை புருவ மென்

பூங்கொம்பனார் உடனே கூட

நனி மிகக் கண்ட போதின்

நல்ல மங்கலங்கள் கூறி

மனிதரும் தேவர் ஆனார்

கண்இமையாது வாழ்த்தி

---------------

பெரியபுராணம் - 3136.

எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான், எம்பிராட்டி அன்னை தோத்திர பூர்ணாம்பிகை திருக்கலியாணம்.

------------------

தூய்மை செய்யும் மெய்க்கோலம் நீடிய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரை வளைந்த வில்லைப்போன்ற புருவங்களையுடைய மெல்லிய பூங்கொம்பு போன்ற தேவியாருடனே கூட மிக்க ஆர்வத்துடன் கண்டபோதில் நல்ல மங்கல வாழ்த்துக்களைச் சொல்லி கண்ணிமைக்காமல் பார்த்து வாழ்த்திய வகையினாலே மனிதர்களும் தேவர்களாயினார்கள்.

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...