Thursday, June 12, 2025

கண்ணன் பாமாலை - நிம்மதி அடைந்தேன் உலகம் - Nimmathi Adainthen Ulagam Maranthen

 

நிம்மதி அடைந்தேன் உலகம் - Nimmathi Adainthen Ulagam Maranthen

-------------------------

ராகம் : ஹிந்தோளம்

இயற்றியவர் : ஸ்ரீ அரணா தாஸ்

-----------------------

நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் - நானே!

 

ஸத்குரு பாதுகை குஞ்சலம் என்மேல் பட்டபோது தானே

நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

 

குருவின் மலரடியை என்றும் (என்) கண்ணால் பார்த்து நின்றேன்

மற்றெல்லாம் மாயை பொய் என்னும் கனவில் கண்ட பொருள் போல் உணர்ந்தேன்

 

நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

 

பிறப்பிரப்பாம் பவம் எனும் கடலில் ஜலம் முழுதும் வத்தி போச்சு

அதை தாண்டவும் பாக்கியம் தேடும் கவலை நம்மை விட்டு போச்சு

 

நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

 

மலையை குடையாய் தாங்கிய கோகுலம் காத்த கோவிந்தனை

சரணமாய் அடையவே அவன் தன் பார்வையை உட்புறம் ஆக்கிவிட்டான்

 

நிம்மதி அடைந்தேன் உலகம் மறந்தேன் ஆனந்தம் தான் அடைந்தேன் நான்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...