நல்வழி - ஒளவை பிராட்டியார்
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து
எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை
மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.
-----
விளக்கம் : உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள்

No comments:
Post a Comment