Thursday, August 7, 2025

சக்தி பாமாலை - காமாட்சித் தாய்மடியில் - Kamakshi Thai Madiyil...

காமாட்சித் தாய்மடியில் - KAMAKSHI THAI MADIYIL...
------------------
இயற்றியவர் : நெல்லை ஸ்ரீ அருள்மணி
------------------

காமாட்சித் தாய்மடியில் சீராட்சி புரிந்துவரும்
காமகோடி தரிசனம் காணக்காண புண்ணியம் (காமாட்சி)
 
தவக்கோலம் தனக்காக தர்மங்கள் நமக்காக
அவதாரத் திருச்செல்வர் அபிராமி அருட்செல்வர் (காமாட்சி)
 
பாரிஜாத நறுமணம் பரவும்சீர் பாதமே
சதுர்வேத கீதமே சங்கரனைப் பாடுமே
ஹரஹர சங்கர ஜயஜய சங்கர (காமாட்சி)
 
கோபுரத் திருவுள்ளம் கொடிமரக் கனிவுள்ளம்
திருக்காஞ்சி முனிவுள்ளம் தீபத்தின் ஒளிவெள்ளம்
மவுன நிலையாலே புவனம் முழுதாளும்
சிவனார் திருக்கோலம் சங்கரி புகழ்க்கோலம்
வணங்கிட கரமுண்டு வாழ்த்திடும் மனமுண்டு
மணம்தரும் பணிவுண்டு மாரிபோல் அருளுண்டு (காமாட்சி)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...