Friday, June 27, 2025

சக்தி பாமாலை - ஆத்தா கருமாரி கண் – Aatha Karumaari Kanpartha

 

ஆத்தா கருமாரி கண் – Aatha Karumaari Kanpartha

----------------------------

நெறஞ்ச மனசு உனக்குத்தாண்டி மகமாயி - உன்னே

நெனச்சிப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி

மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி - கண்ணில்

தொட்டியங்குளம்  தெரியுதடி மகமாயி

 

நமையாளும் நாயகியாம் நம் மகமாயி

கண் இமை போல காத்திடுவாள் மகமாயி

உமையவள் அவளே இமவான் மகளே

சமயத்தில் வருபவள் அவளே எங்கள் சமயபுரத்தாள் அவளே

 

இசைக்கலை யாவும் தந்தருளவேண்டும்

என் குல தெய்வமே மகமாயி 

தஞ்சமென்று உன்னை சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி

முந்தை வினைகளை களைந்தெறிவாள்

தாய் மயிலையிலே முண்டகக்கண்ணி கோலவிழி பத்ரகாளி

வேண்டும் வரம் தருவாள் என் தாய் வேற்காட்டு கருமாரி

----------------------

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்

பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்

பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும் 

காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி (2)

நார்த்தாமலை வாழும்...  நார்த்தாமலை வாழும்

எங்கள் நாயகியாம் திரிசூலி - (ஆத்தா)

 

நெஞ்சினிலே நிறைந்திருப்பா நிம்மதியைத் தந்திடுவா

வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை நீக்கிடுவா

மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாய் சிரிச்சி நிப்பா (2)

தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா (2)

 

மல்லிகை சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி

மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலுமிட்டோம் - அம்மா

துள்ளியே எந்தன் முன்னே வாருமம்மா - அம்மா

தூயவளே என் தாயே மாரியம்மா

 

பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு

பாவாடை சேலைகளும்  கொண்டு வந்தோம்

பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு

பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

 

உன்னிடத்தில் சொல்லாமல்

வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே

எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற

அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா

கண்ணீரை துடைத்து விட ஓடி வா அம்மா

காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா

இந்த சின்னவனின் குரல்  கேட்டு உன் முகம் திருப்பு - அம்மா

சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு அம்மா

 

கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும் - அம்மா

காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்

பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும் - அம்மா

எல்லோரும் பக்தியோடு கையெடுத்து

உன்னையே கும்பிடவேண்டும்

எண்ணமெல்லாம் உன் நினைவே ஆகவேண்டும்

இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...