ஹரே ராம ஹரே ராம
– Hare Rama Hare Rama
------
இயற்றியவர்
- ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
-----
ஹரே
ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
கலியையும்
பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத
கீர்த்தனம் பாடீரே| கீர்த்தனம் பாடீரே|
ஈரெட்டா
வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும்
ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
மண்ணுலக
ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
பொருளோ
செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும்
கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
பண்டிதன்
முதற்க்கொண்டு பாமரன் வரையிலும்
அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
வாரி
இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே
அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
உலக
மக்கள் உய்ய ஓர் வழி
கண்டாரே
அவல நிலை போக்கும் கீர்த்தனம்
பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
யோகமும்
யாகமும் தீர்த்தமும் தெய்வமும்
குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே | (ஹரே ராம ஹரே ராம)
சித்தாகாஸத்தில்
மிளிர்ந்திடும் நாமமாம்
யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே | (ஹரே ராம ஹரே ராம)
பாடிடும்
பக்தரையும் பாடிடும் தலத்தையும்
பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே | (ஹரே ராம ஹரே ராம)
பறவை
விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே
பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே | (ஹரே ராம ஹரே ராம)
தேவரும்
தெரிவரே தெய்வமும் பேசுமாம்
உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே | (ஹரே ராம ஹரே ராம)
உலகம்
அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
உணவு
மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
இருந்த
இடத்தில் இருந்த படியே
வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம)
சைதன்ய
தேவரும் நித்யானந்தரும்
பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே| (ஹரே ராம ஹரே ராம

No comments:
Post a Comment