Saturday, June 14, 2025

ராமர் பாமாலை - இராமனை பஜித்தால் - Ramanai Bajithaal

இராமனை பஜித்தால் - Ramanai Bajithaal

--------------

இராமனை பஜித்தால் நோய் வினை தீருமே

சஞ்சலம் அகன்றிடுமே - ஸீதா                                 (இராமனை)

 

இராமனை கண்ணால் காண்போம் இன்றே

பிறந்த பயன் அடைவோம் 

துன்பமோடின்பம் கலந்தது பிரபஞ்சம்

வெயில் இல்லையேல் நிழலில் இன்பமும் உண்டோ

துயரில்லையேல் அய்யனை நினனப்பார் உண்டோ

சோதனை தீயில் புடமிடுவான் நம்மை

தூக்கி எடுத்தானந்தம் அளித்திடுவான்         (இராமனை)

 

அவன்  நாமாமிர்தம் செவிக்கு திவ்ய ஔஷதம்

இராம நாமாமிர்தம் செவிக்கு திவ்ய ஔஷதம்

ஹரே ராம் ராம் ராம் ஸீதா ராம் ராம் ராம்     (இராமனை)


No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...