Monday, August 18, 2025

சக்தி பாமாலை - சிவப்பு சேலை கட்டிகிட்டு - Sivapu Selai Kattikittu

சிவப்பு சேலை கட்டிகிட்டு - Sivapu Selai Kattikittu

------------------------

சிவப்பு சேலை கட்டிகிட்டு
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம் - அவள்
விருப்புடனே தொழுபவரின்
வினைகளையே ஓடவைத்து
பொறுப்புடனே நம்மைக் காக்க ஆடி வந்தாளாம்
மாரியம்மா கருமாரியம்மா
 
சிறப்புடனே பவனி வந்து
சிந்தையிலே குடிபுகுந்து
சிறப்புடனே பவனி வந்து
சிந்தையிலே குடிபுகுந்து
கருணை உள்ளம் கொண்டு நம்மைக் காக்க வந்தாளாம்
அவள் மரகத்தில் திலகமிட்டு
மரிக்கொழுந்த மலரெடுத்து
மரிக்கொழுந்த மலரெடுத்து
சிரசினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளம்
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
 
உன்வேப்பிலையும் திருநீரும்
வேண்டியதைத் தந்திடுமே அம்மா
காப்பது உன் திரிசூலம்
கவலையாவும் தீருமே அம்மா
மாபெரும் பக்தர்கள் கூட்டம்
உன் சன்னதியில் கூடிடுமே அம்மா
ஆபத்தில்  உதவிட உன் ஆயிரம் கைகள்
எங்களை அணைத்திடுமே அம்மா

தொட்டியங்குளம் தன்னில் வாழும் எங்கள் மகமாயி
மட்டில்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி
சட்டியிலே நெருப் பெடுத்து சதிராடும் மாரி
சட்டியிலே நெருப் பெடுத்து சதிராடும் மாரி
கட்டிக் காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி
கட்டிக் காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...