Thursday, August 21, 2025

சக்தி பாமாலை - சந்திரனொளியில் அவளைக் கண்டேன் - Chandiran Oliyil Avalai Kanden

சந்திரனொளியில் அவளைக் கண்டேன் - Chandiran Oliyil Avalai Kanden

----------------

ரகம் : சந்திரகவுன்ஸ்

----------------

சந்திரனொளியில் அவளைக் கண்டேன்

சரணமென்று புகுந்து கொண்டேன்

இந்திரியங்களை வென்று விட்டேன்

எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்

 

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்

பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்

துயரிலாதெனைச் செய்து விட்டாள்

துன்பமென்பதைக் கொய்து விட்டாள்

 

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்

வீசி நிற்கும் வளியைச் செய்தாள்

வான்கணுள்ள வெளியைச் செய்தாள்

வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்


சந்திரனொளியில் அவளைக் கண்டேன்

சரணமென்று புகுந்து கொண்டேன்

இந்திரியங்களை வென்று விட்டேன்

எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...