Thursday, July 10, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா - Mahaperiyava Kanchi Mahaperiyava

 
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா - Mahaperiyava Kanchi Mahaperiyava
 -----------------------
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மண்ணுலகம் வந்த சிவனே மஹாபெரியவா
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா
மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹாபெரியவா
 
அன்புருவம் கொண்டவரே மஹாபெரியவா
ஆனந்தம் தரும் கோலம் மஹாபெரியவா
இன்முகம் காட்டுபவர் மஹாபெரியவா
ஈசனின் அம்சமே மஹாபெரியவா
 
உற்சவராய் உலா வந்தார் மஹாபெரியவா
ஊர்தோறும் நடந்தாரே மஹாபெரியவா
என்றும் அவர் புகழ் பாட மஹாபெரியவா
ஏற்றங்கள் அளிப்பாரே மஹாபெரியவா
 
ஐயங்கள் களைபவரே மஹாபெரியவா
ஒப்புயர்வு அற்ற மஹான் மஹாபெரியவா
ஓர் பரப் பிரம்மமே மஹாபெரியவா
ஔடதமே நமக்கென்றும் மஹாபெரியவா
 
கண்கொண்டு பார்த்திட்டால் மஹாபெரியவா
காருண்யம் பொங்கிடுமே மஹாபெரியவா
கிட்டிடுமே கைலாயம் மஹாபெரியவா
கீர்த்திகளை பாடி மகிழ்வோம் மஹாபெரியவா
 
குறையொன்றும் வாராதே மஹாபெரியவா
கூப்பி உம்மை கை தொழுதால் மஹாபெரியவா
கெட்டியாக பாதம் பற்ற மஹாபெரியவா
கேட்ட வரம் அருள்வீரே மஹாபெரியவா
 
கை தொழுதால் கை கொடுப்பீர் மஹாபெரியவா
கொட்டும் மேளம் மனதினுள்ளே மஹாபெரியவா
கோடி சந்திர பிரகாசரே மஹாபெரியவா
கௌபீன தாரியே மஹாபெரியவா

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...