Thursday, July 10, 2025

குரு வந்தனம் - மஹா பெரியவா - ஆதி சங்கரா அத்வைத சங்கரா – Aadhi Sankara Advaitha Sankara

ஆதி சங்கரா அத்வைத சங்கரா – Aadhi Sankara Advaitha Sankara

(ஹரிவராசனம் பாடல் மெட்டு)

----------------------

ஆதி சங்கரா அத்வைத சங்கரா
காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா
ஜோதி சங்கரா சிவ ரூப சங்கரா
பாதி பிறைகொண்ட சந்திர சேகரா
 
சந்த்ரசேகர மஹா ஸ்வாமியே
மந்திர தந்திரம் நானறியேனே
உன்திருப் பெயரே உளமார ஓதுவேன்
என்னிரு விழியால் உனை கண்டு மகிழ்வேன்
 
உன்னை வணங்கியே நித்தம் எழுவேனே
உன்னை பூஜித்தே சித்தம் தெளிவேனே
உன்னை எண்ணியே உழல்வேன் நாளுமே
உன்னை போற்றியே சுழல்வேன் மண்ணிலே
 
உந்தன் நெற்றியை காண வெற்றியே
உந்தன் பூமுகம் காண மலர்வோமே
உந்தன் கண்களை காண கிறங்குவோம்
உந்தன் கைகளை காண துடிப்போம்
 
வாய் திறந்து நீ பேச மகிழ்வோம்
மெய் மறந்து தான் கேட்டு மகிழ்வோம்
தாய் பாசத்தை உணர்ந்தோம் உன்னிடம்
பொய் வேஷத்தை விட்டோம் உன்னிடம்
 
அற உரைகள் நீ ஆற்றிடுவாயே
அறிவுரைகள் நீ தந்திடு வாயே
வரைமுறை இன்றி வாழ்ந்து நொந்தோம்
வரை முறையோடு இனி வாழ்ந்து வெல்வோம்
 
மஹா பெரியவா காஞ்சி மஹா பெரியவா
மஹான்கள் வணங்கும் மஹா பெரியவா
மஹா பெரியவா எங்கள் மஹா பெரியவா
மஹா பாக்கியம் எங்கள் மஹா பாக்கியம்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...