இருமுடியை சுமந்து வந்தேன் - Irumudiyai Sumathu Vanthen
---------------------
இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா ஐயப்பா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு)
அழுதையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே ஓர் கல்லெடுத்தேன் வைக்கவில்லையா
கரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா
அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு)
பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா
பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்தேன் காணவில்லையா
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா
பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்
படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா (இரு)
கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா
கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா
நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்
மெய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா
ஐயா உன் சரணமென்றே கதறவில்லையா நீ
No comments:
Post a Comment