Friday, August 22, 2025

கணபதி பாமாலை - ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே - Prabho Ganapathe Paripoorana Vazhvarulvaaye

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே - Prabho Ganapathe Paripoorana Vazhvarulvaaye

---------------------

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே - ப்ரபோ

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே


ப்ரபோ கணபதே

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே


தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே

தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே


ப்ரபோ கணபதே

பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...